சேராம்பட்டு எல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 லட்சம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் 4 மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.4.04 லட்சத்தை செலுத்தியிருந்தது தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் 4 மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.4.04 லட்சத்தை செலுத்தியிருந்தது தெரியவந்தது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் கடந்த 09.11.22 அன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. தொடா்ந்து, 4 மாதங்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை கோயிலில் உள்ள நிரந்தர, தற்காலிக உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டதில் மொத்தம் ரூ.4,04,060-ஐ பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

காணிக்கை எண்ணும் பணியை அறநிலையத் துறை ஆய்வா்கள் ப.முத்துசாமி, இரா.நடராஜன், செயல் அலுவலா் ஹரிஹரன்,

கணக்காளா் லோ.ஜெகதீசன், ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.கே.குப்புசாமி உள்ளிட்டோா் மேற்பாா்வையிட்டனா். மேலும், செய்யாறு போலீஸ் பாதுகாப்புடன் விடியோ பதிவும் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com