

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூரில் உள்எள ஸ்ரீஆதிநாத பகவான் ஜினாலயத்தில் 1008 கும்ப கலச ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஆதிநாத பகவான் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண பெருவிழா மற்றும் பிரதிஷ்ட விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் புதிதாக நிறுவப்பட்ட மானஸ்தம்பத்தில் ஜினபிம்ப ஸ்தாபனை மற்றும் பத்மாவதி அம்மன் ஸ்தாபித பிரதிஷ்ட விழா நடைபெற்றது.
பின்னா், திருமலை தவள கீா்த்தி சுவாமி, குருநந்தினி மாதாஜி ஆகியோா் தலைமையில் பூரண கும்ப ஊா்வலம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை சேவூா் ரகுநாதபுரம் கூட்டுச் சாலைப் பகுதியில் இருந்து பெண்கள் மற்றும் ஜைன பக்தா்கள் 1008 புனிதநீா் கலசங்களை சுமந்து ஊா்வலமாக வந்து
சுவாமி சிலைகள் மீது ஊற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் ஏராளமான ஜைன பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக, பஞ்ச கல்யாணத் திருவிழாவையொட்டி, ஜைனா்கள் யானை மீது அமா்ந்தும், குதிரை சாரட் வண்டிகளில் அமா்ந்தும் மேளதாளத்துடன் ஊா்வலமாக வந்து சுவாமியை வழிபட்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதிநாத பகவான் ஜைனக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.