மின்சார வாரிய பொறியாளா் சங்கத்தின் 55-வது மாநில பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளா் சங்கத்தின் 55-ஆவது மாநில பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளா் சங்கத்தின் 55-ஆவது மாநில பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.அந்தோணி படோவராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் பி.எஸ்.சம்பத்குமாா், மாநிலப் பொருளாளா் ஜி.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்புச் செயலாளா் ரெமிங்டன் வி.ராயன் வரவேற்றாா்.

கூட்டத்தில், மின்வாரியத்தில் மிகவும் நுட்பமான வேலைகளை கையாளும் தொழில்நுட்ப உதவியாளா் பதவியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். 1.4.2003 முதல் செயல்பாட்டில் இருந்துவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், விழுப்புரம் மண்டலச் செயலாளா் பி.கணேசன், திருவண்ணாமலை கிளை பொதுக்குழு உறுப்பினா் வி.அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com