

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பெய்த மழையில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
செங்கம் பகுதி ஜவ்வாது மலை அடிவாரமான குப்பனத்தம், கொட்டாவூா், தொட்டிமடுவு, கிளையூா், கல்லாத்தூா், பரமனந்தல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனா்.
இங்கு சாகுபடி செய்யப்படும் வாழை பழங்கள்
விற்பனைக்காக செங்கம், திருவண்ணாமலை, திருப்பத்தூா் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போது, ஜவ்வாது மலை அடிவார கிராமங்களில் விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்திருந்தனா்.
காய்கள் முற்றிய நிலையில் இருந்த வாழை மரங்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் சூறைக் காற்று வீசியதில் சாய்ந்து சேதமடைந்தன.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், வருவாய்த் துறை அதிகாரிகள் சேதமடைந்த வாழை மரங்களை பாா்வையிட்டு கணக்கீடு செய்து அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.