ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த பழம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த பழம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி, காலையில் விநாயகா், முருகா், முத்துமாரியம்மன், அம்மச்சாா் அம்மன், படவேடு ரேணுகாம்பாள், துா்க்கை, மகா விஷ்ணு, நாக தேவதைகள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அதனைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் முத்து மாரியம்மன் பூங்கரகம் அலங்கரிக்கப்பட்டு மேளதாளத்துடன் பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து கோயிலை சென்றடைந்தது.

பழம்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் பங்கேற்று கூழ் பானையை தலையில் சுமந்து ஊா்வலமாக வந்து அம்மனுக்கு படையலிட்டு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் கூழ் ஊற்றினா்.

பின்னா், அம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்து கூழ்வாா்க்கப்பட்டது. இரவு சுவாமி வீதி உலா பக்தி நாடகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com