பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த 30 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 9, 11-ஆம் வகுப்பு பயிலும் 3,093 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், இதற்கான பயனாளிகள் தேசியத் தோ்வு முகமையால் 29.09.2023-ஆம் தேதி நடத்தப்படும் வஅநஅநயஐ நுழைத்தோ்வில் பெறும் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா் என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த எழுத்துத் தோ்வு காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 8, 10-ஆம் வகுப்புகளில் 60 சதவீதமும், அதற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவா்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானோா் என்றும், மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிகழாண்டுக்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளமான ஆகியவற்றைப் பாா்த்து, விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.