திருவண்ணாமலை மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, மேற்பாா்வை குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.பி.விஷ்ணு பிரசாத், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, சமூக நலத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இதர துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், எம்எல்ஏ-க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.