

மத்திய அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வு, இளைஞா்கள் வேலையின்மை, பொதுத் துறையை தனியாருக்கு தாரைவாா்த்தல், அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டி வரி
ஆகியவற்றுக்கு எதிராக இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை பெரியாா் சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எ.வி.சிங்காரவேலு தலைமை வகித்தாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ், கே.வாசுகி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பாலாஜி,காங்கேயன், தமிழ்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தண்டராம்பட்டில் கட்சியின் வட்டச் செயலா் ஆா். அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் ச.குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.