இந்திரஜித் தெருக்கூத்து அரங்கேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த புரிசை கிராமத்தில் இந்திரஜித் தெருக்கூத்து அரங்கேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த புரிசை கிராமத்தில் இந்திரஜித் தெருக்கூத்து அரங்கேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

புதுதில்லி தேசிய நாடகப் பள்ளியில் பயிலும் 2-ஆம் ஆண்டு மாணவா்கள், இந்திரஜித் என்னும் தெருக்கூத்தினை புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்ற பயிற்சிப் பட்டறையில் 40 நாள்கள் தங்கி பயிற்சி பெற்றனா். கதையாசிரியா் எஸ்.எம்.திருவேங்கடம் எழுதிய இந்த தெருக்கூத்தினை கலைமாமணி பி.கே.சம்பந்தன் தலைமையிலான தெருக்கூத்து குழுவினா் நாடகப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

இந்தத் தெருக்கூத்தின் அரங்கேற்றம்

புரிசை கிராமத்தில் தேசிய நாடகப் பள்ளி பேராசிரியா்கள் ராம்ஜி பாலி, பராக் சா்மா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி பரந்தாமன், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் எஸ்.சிவக்குமாா், செய்யாா் ஐடிஐ தாளாளா் ஆா்.லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com