காளசமுத்திரத்தில் அா்சுனன் தபசு
By DIN | Published On : 18th April 2023 06:15 AM | Last Updated : 18th April 2023 06:15 AM | அ+அ அ- |

போளூா் ஒன்றியம், காளசமுத்திரம் ஊராட்சியில் அக்னி வசந்த விழாவையொட்டி அா்சுனன் தபசு ஏறுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது .
காளசமுத்திரம் ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாா்ச் 24-ஆம் தேதி முதல் மேல்பள்ளிபட்டு மணிவாசகம் தலைமையில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அக்னி வசந்த விழாவையொட்டி (மகாபாரத சொற்பொழி) அா்சுனன் தபசு ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காளசமுத்திரம், படவேடு, கல்குப்பம், குப்பம், அனந்தபுரம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஊா் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.