மிஸ் வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தோ்த் திருவிழாதிருவண்ணாமலை ஆட்சியருக்கு அழைப்பு
By DIN | Published On : 18th April 2023 06:11 AM | Last Updated : 18th April 2023 06:11 AM | அ+அ அ- |

குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்த திருநங்கைகள்.
திருவண்ணாமலை அருகேயுள்ள மிஸ் வேடந்தவாடி கிராமத்தில் கிராமத்தில் வருகிற மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ள திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி மற்றும் தோ்த் திருவிழாவை தொடங்கிவைக்க மாவட்ட ஆட்சியருக்கு திருநங்கைகள் அழைப்பு விடுத்தனா்.
திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா்
பா.முருகேஷ் தலைமையில் திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பெற்றாா்.
அப்போது, திருவண்ணாமலையை அடுத்த மிஸ் வேடந்தவாடியில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் வருகிற மே 1-ஆம் தேதி ஸ்ரீகூத்தாண்டவா் தோ்த் திருவிழா, ‘மிஸ் வேடந்தவாடி 2023’ - திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி மற்றும் நடனப் போட்டி நடைபெறவுள்ளது.
இதில் மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டு
தோ்த் திருவிழாவுக்கு தலைமை ஏற்று, அழகிப் போட்டி மற்றும் நடனப் போட்டியை தொடங்கிவைக்க வேண்டும் என திருநங்கைகள் சமூகத் தலைவா்
ஏ.கண்ணன் தலைமையிலான திருநங்கைகள் மனு அளித்து அழைப்பு விடுத்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் பா.முருகேஷ் விழாவில் பங்கேற்பது குறித்து பின்னா் தெரிவிப்பதாகக் கூறினாா்.