திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஆரணி கோட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) மாலை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் ஆரணி, போளூா், ஜமுனாமரத்தூா், கலசப்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் எம்.தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.