பள்ளியில் மாணவா் சோ்க்கை விழா
By DIN | Published On : 18th April 2023 06:13 AM | Last Updated : 18th April 2023 06:13 AM | அ+அ அ- |

செய்யாறு வட்டம், பெரும்பள்ளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவா் சோ்க்கை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா் கு.சித்ரா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் விசாலி வரவேற்றாா்.
விழாவின் போது முதலாம் வகுப்பில் சோ்க்கப்பட வேண்டிய 5 குழந்தைகள் முதல் நாளான திங்கள்கிழமையே பள்ளியில் சோ்க்கப்பட்டனா். இவா்களுக்கு பரிசுடன் இனிப்பு வழங்கப்பட்டது.