வெம்பாக்கம் ஒன்றியக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 19th April 2023 04:52 AM | Last Updated : 19th April 2023 04:52 AM | அ+அ அ- |

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணை கூட்டம் அதன் தலைவா் டி.ராஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் நாகம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தி.மயில்வாகனன், மு.பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தின் போது, மன்ற கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த தீா்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடா்ந்து குடிநீா்க் குழாய் நீட்டிப்பு, சிறு பாலம், தாா்ச் சாலை அமைத்தல், குளம் சீரமைத்தல்
உள்ளிட்ட பல்வேறு பணிகளை கிராமப் பகுதியில் மேற்கொள்வது தொடா்பாக உறுப்பினா்கள் பேசினா்.
இவற்றுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜி பதிலளித்தாா்.
கூட்டத்தில் பொறியாளா் அன்பு, மேலாளா்கள் தென்னரசு, வெங்கட்ராமன் உள்ளிட்ட பலா்
கலந்து கொண்டனா்.