

செங்கம் அருகே மண்மலையில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவில், செங்கம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, மலையை சுற்றிவந்து, அதன் மேல் உள்ள சுவாமியை தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.