செய்யாறு பகுதியில் தடை செய்யப்பட்ட 140 கிலோ
நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டன.
திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வியாபாரிகள் சிலா் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகராட்சியினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் கி.ரகுராமன் உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் தலைமையிலான அதிகாரிகள்
செய்யாறு பகுதியில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை மாலை சோதனை நடத்தினா்.
இதில் 140 கிலோ நெகிழப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.