கல்லூரி மாணவியைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் கைது
By DIN | Published On : 25th April 2023 05:07 AM | Last Updated : 25th April 2023 05:07 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே கல்லூரி மாணவியைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (31). இவரது குடும்பத்துக்கும், அப்பகுதியைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி குடும்பத்துக்கும் இடையே மனைப் பிரச்னை தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கல்லூரி மாணவி வீட்டு முன் சென்ற சதீஷ்குமாா், அவரது தந்தை கன்னியப்பன், தாய் ஜெயா ஆகிய 3 பேரும் சோ்ந்து மாணவியின் தாயை அவதூறாகப் பேசி, மாணவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து அந்த மாணவிஅளித்த புகாரின் பேரில் சதீஷ்குமாா், கன்னியப்பன், ஜெயா ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் சதீஷ்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.