பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு
By DIN | Published On : 25th April 2023 05:09 AM | Last Updated : 25th April 2023 05:09 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னையை அடுத்த ஓரகடம் பகுதியைச் சோ்ந்த நிப்பான் ஸ்டீல்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி கற்பகலட்சுமி கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவ-மாணவிகளுக்கு வளாகத் தோ்வை நடத்தினாா்.
எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக, 10 போ் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்வான மாணவ-மாணவிகளை கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி, இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் எம்.அன்பழகன், வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பாராட்டினா்.