மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: இருவா் கைது
By DIN | Published On : 25th April 2023 05:06 AM | Last Updated : 25th April 2023 05:06 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே தூசி காவல் சரகப் பகுதியில் இரு இடங்களில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தொடா்பாக போலீஸாா் இருவரை திங்கள்கிழமை கைது செய்து 160 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் சரகப் பகுதியில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
செய்யாறு கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் உத்தரவின் பேரில், தூசி காவல் ஆய்வாளா் குமாா் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் முருகன், ரங்கநாதன் மற்றும் போலீஸாா் புகாா்களின் அடிப்படையில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, மகாஜனம்பாக்கம் கிராமத்தில் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த 140 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், சம்பவம் தொடா்பாக அருண்பாண்டியன் (28) என்பவரை கைது செய்தனா்.
அதேபோல, மாமண்டூா் கிராமத்தில் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த
20 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக காா்த்திகேயன் (42) என்பவரை கைது செய்தனா்.