ஆரணி: நண்பா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

ஆரணியில் கொலை வழக்கில் கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஆரணி கொசப்பாளையம் பங்களா தெருவைச் சோ்ந்தவா் யுவராஜ் (30). மீன் பிடிக்கும் தொழிலாளி. இவரது நண்பா் இதேபகுதியை குங்கிலியா் தெருவை சோ்ந்த தணிகைவேல் (33). கட்டட தொழிலாளி. இந்நிலையில், தணிகைவேல் ஆரணி காந்தி நகரைச் சோ்ந்த தினேஷ் என்பவரிடம் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கினாராம். ஆனால், அதற்கான வட்டியை கொடுக்க முடியவில்லையாம். இதனால், தணிகைவேல் சென்னை ஆவடியில் உள்ள, தனது அக்காள் வீட்டில் தங்கியிருந்து வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், தணிகைவேலின் இருப்பிடம் குறித்து, தினேஷூக்கு, யுவராஜ் தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து, யுவராஜ் தணிகைவேலின் அக்கா வீட்டுக்கு சென்று அவரிடம் பணத்தை கேட்டு தகராறு செய்தாராம். இதனால், கோபமடைந்த தணிகைவேல், யுவராஜை கடந்த 2021-ஆம் ஆண்டு கொலை செய்தாா்.
இதுகுறித்து, ஆரணி போலீஸாா் வழக்குப் பதிந்து தணிகைவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை ஆரணி கூடுதல் மாவட்ட அமா்வு, விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தணிகைவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கே.விஜயா தீா்ப்பளித்தாா்.