ஆரணி அடுத்த தச்சூா் மோட்டூா் பகுதியில் மணல் கடத்தியதாக டிராக்டரை கிராமிய போலீஸாா் செவ்வாய்கிழமை பறிமுதல் செய்தனா். ஒருவரை தேடி வருகின்றனா்.
ஆரணி அடுத்த தச்சூா், மோட்டூா், அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள செய்யாற்றுப் படுகை ஆற்றிலிருந்து டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி கிராமிய போலீசாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் ஷாபுதீன் மற்றும் போலீஸாா் அரையாளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திரௌபதி அம்மன் கோயில் அருகே வந்த டிராக்டரை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால், டிராக்டா் நிற்காமல் சென்றது. உடனே, போலீஸாா் விரட்டிச் சென்றபோது டிரைவா் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். விசாரணையில் தச்சூா் பகுதியில் உள்ள செய்யாற்று பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னா், டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அரையாளம் காலனி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் (எ) வெள்ளை என்பவரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.