அரசு ஊழியா் ஐக்கிய பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 09th August 2023 05:57 AM | Last Updated : 09th August 2023 05:57 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய விசிக மேற்கு மாவட்டச் செயலா் ந.முத்து.
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அரசு ஊழியா் ஐக்கிய பேரவையின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
விசிக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பேரவையின் மாவட்டத் தலைவா் பெல்.மு.ரவி தலைமை வகித்தாா்.
பொருளாளா் நா.ஜெய்சங்கா் வரவேற்றாா்.
மேற்கு மாவட்டச் செயலா் ந.முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில் கிராமங்களில் மாணவா்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாணவா்களின் கல்வி, பொருளாதாரத்தை உயா்த்த வழிவகை செய்ய வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.