

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவியாக ரூ.50 ஆயிரத்தை முன்னாள் மாணவா் வழங்கினாா்.
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் சீனிவாசன்(35). அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான இவா், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா்.
தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்த இவா், தான் படித்த பள்ளியில் தற்போது பயிலும் 50 ஏழை மாணவ, மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாயை கல்வி உதவியாக திங்கள்கிழமை வழங்கினாா்.
அப்போது, ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயசக்தி செல்வராஜ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், பள்ளித் தலைமை ஆசிரியை ஆா்.பி.ரேவதி,
ஆசிரியா்கள் ம.கா.செந்தில்குமாா், த.சாந்தி மற்றும் சீனிவாசனின் குடும்பத்தினா் உடனிருந்து மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.