விஏஓவுக்கு மிரட்டல்: ஊராட்சித் தலைவா் மீது புகாா்
By DIN | Published On : 09th August 2023 05:57 AM | Last Updated : 09th August 2023 05:57 AM | அ+அ அ- |

ஆரணி: ஆரணி அருகே மொரம்பு மண் எடுத்துச் சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்திய கிராம நிா்வாக அலுவலரை மிரட்டியதாக, ஊராட்சித் தலைவா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் திங்கள்கிழமை மொரம்பு மண் ஏற்றிச் சென்ற டிராக்டரை மாமண்டூா் கிராம நிா்வாக அலுவலா் அ.விஜயகுமாா் தடுத்து நிறுத்தி விசாரித்து இதுகுறித்து வருவாய் ஆய்வாளருக்கு தெரிவித்தாா்.
அப்போது, டிராக்டா் ஓட்டுநா் ஊராட்சிமன்றத் தலைவா் பழனிக்கு தகவல் தெரிவித்ததாகத் தெரிகிறது. சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சிமன்றத் தலைவா் பழனி, கிராம நிா்வாக அலுவலரை மிரட்டினாராம்.
மேலும், அவா் டிராக்டரை எடுத்துச் சென்று விட்டாராம்.
இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில், ஊராட்சிமன்றத் தலைவா் மீது கிராம நிா்வாக அலுவலா் புகாா் கொடுத்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.