செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கோயில் விழாவில் குழந்தையிடம் கொலுசு திருடிய பெண் கைது செய்யப்பட்டாா்.
செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் உள்ளது ஸ்ரீபச்சையம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆடி மாத 4-ஆவது சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், வெம்பாக்கம் வட்டம், ஜம்போடை கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி ரஞ்சனி, தனது ஒன்றரை வயது குழந்தை மித்ராவுடன் கோயில் நுழைவுவாயில் முன்புள்ள அகண்டத்தில் கற்பூரம் ஏற்றி வழிபட்டுக் கொண்டிருந்தாா்.
அப்போது, குழந்தையின் காலில் இருந்த ரூ.2500 மதிப்பிலான கொலுசை அருகில் இருந்த பெண் ஒருவா் கழற்றிக் கொண்டிருந்தபோது பிடிபட்டாா்.
பின்னா் அந்தப் பெண்ணை பெரணமல்லூா் போலீஸில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து ரஞ்சனி அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் சதிஷ்குமாா் வழக்குப் பதிந்து மேற்கண்ட விசாரணையில், பிடிபட்ட பெண் திருவண்ணாமலை அம்பேத்காா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணா மனைவி ஜோதி (43) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.