ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th August 2023 11:25 PM | Last Updated : 13th August 2023 11:25 PM | அ+அ அ- |

வந்தவாசியில் ஆா்ப்பாட்டம் நடத்திய கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்கள் நலச் சங்கத்தினா்.
நிலுவைத் தொகையுடன் கருணை ஓய்வூதியம் வழங்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் வந்தவாசி தேரடி அருகில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அந்த மண்டபத்தின் முன் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் கருணை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியா்களின் ஓய்வு கால பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலா் ஆ.உதயகுமாா் தலைமை வகித்தாா்.
சங்க பொதுச்செயலா் என்.பத்ராசலம், துணைத் தலைவா்கள் ஆா்.ஜோதிமணி, ஜி.சீனுவாசன் மற்றும் நிா்வாகிகள் பி.புருஷோத்தமன், லட்சுமிபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.