தண்டராம்பட்டு அருகே ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, முதலை இழுந்துச் சென்ால் விவசாயி காயமடைந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வேப்பூா் செக்கடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வெங்கடேசன் (56).
இவா், தென்பெண்ணை ஆற்றுக்கு அடிக்கடி சென்று மீன்களைப் பிடித்து வியாபாரம் செய்து வருவாராம்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தென்பெண்ணை ஆற்றில் இறங்கிய வெங்கடேசன், மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, திடீரென அவரை முதலை கவ்வியது. இதனால் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த வெங்கடேசனின் வயிற்றுப் பகுதியில் முதலை கவ்வியதுடன், அவரை ஆற்றுக்குள் இழுத்துச் செல்ல முயன்ாம்.
வெங்கடேசனின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் சென்று ஆற்றில் இறங்கி, முதலையின் பிடியில் இருந்து வெங்கடேசனை மீட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.