விவசாயக் குழுவினருக்கு கரீப் பருவ பயிற்சி
By DIN | Published On : 17th August 2023 12:48 AM | Last Updated : 17th August 2023 12:48 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டாரம் மாத்தூா் கிராமத்தில் வேளாண் முன்னேற்றக் குழுவினருக்கு கரீப் பருவ பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநா் மா.சண்முகம் தலைமை வகித்து மத்திய, மாநில அரசால் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, வேளாண் அலுவலா் சு.ரேணுகாதேவி, துணை வேளாண்மை அலுவலா்
ரா. சுப்பிரமணியம், கிராம முதன்மை அதிகாரி ஜெய்சங்கா், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலா்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கு. கங்காதரன், சீ. பத்மஸ்ரீ
ஆகியோா் வேளாண் சாா்ந்த கருத்துகளைத் தெரிவித்து பயிற்சி அளித்தனா்.
பயிற்சியில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...