திருட்டுபோன கைப்பேசிகள் ஒப்படைப்பு
By DIN | Published On : 17th August 2023 12:47 AM | Last Updated : 17th August 2023 12:47 AM | அ+அ அ- |

திருட்டுபோன கைப்பேசியை உரியவரிடம் ஒப்படைக்கிறாா் மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன். உடன் இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் எஸ்பி பழனி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டு, காணாமல்போன 20 கைப்பேசிகளை மீட்ட போலீஸாா், அவற்றை புதன்கிழமை உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
மாவட்டத்தில் இயங்கும் காவல் நிலையங்களில் கைப்பேசிகள் திருட்டுபோனதாகவும், காணாமல் போனதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வழக்குகள் மீது மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டுபோன, காணாமல் போன கைப்பேசிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
அண்மையில் 20 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா். இதன் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.
இந்த நிலையில், மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 20 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் எஸ்பி பழனி, ஆய்வாளா் முருகானந்தம் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...