திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினா், தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களின் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்ற நல்ல உடல் ஆரோக்கியமும், விருப்பமும் உள்ள 62 வயதுக்கு உள்பட்ட முன்னாள் படைவீரா்கள் தேவைப்படுகிறாா்கள்.
எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது பெயரை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 04175-233047 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.