ஸ்ரீஜெயகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 01st July 2023 07:00 AM | Last Updated : 01st July 2023 07:00 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூா் அருகேயுள்ள ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீஜெயகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்படி, அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜை, பூா்ணாஹூதி, கடம் புறப்பாடு நடைபெற்றது.
காலை 8 மணிக்கு கோபுரக் கலசம், மூலவா் சந்நிதிகளுக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழாக் குழுத் தலைவா் அண்ணாமலை, ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G