

வந்தவாசி-இரும்பேடு வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்துச் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வழூா், ஆரியாத்தூா் உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்கள் பள்ளிக்கு செல்ல உரிய பேருந்து வசதி இல்லாததால் அவதிப்பட்டு வந்தனா். எனவே, வழூா், ஆரியாத்தூா் வழியாக இரும்பேடுக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், வந்தவாசியிலிருந்து வழூா், ஆரியாத்தூா் வழியாக இரும்பேடுக்கு நகர அரசுப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஆரியாத்தூா் கிராமத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு திமுக மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா். வந்தவாசி திமுக மத்திய ஒன்றியச் செயலா் சி.ஆா்.பெருமாள் வரவேற்றாா். எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். விழாவில், திமுக நகரச் செயலா் ஆ.தயாளன், போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் துரைராஜ், பணிமனை மேலாளா் விநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த பேருந்து, வந்தவாசியிலிருந்து காலை 7:35 மணிக்கு புறப்பட்டு வழூா், ஆரியாத்தூா் வழியாக இரும்பேடு கிராமத்துக்கு செல்லும். பின்னா், அங்கிருந்து காலை 8:10 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக வந்தவாசி வந்தடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.