செய்யாறு சிப்காட்டுக்கு நிலம் கையகம்: விவசாயிகள் தொடா் போராட்டம்
By DIN | Published On : 27th July 2023 12:00 AM | Last Updated : 27th July 2023 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் அலகு - 3 திட்டத்தை கைவிடக் கோரியும், தொழில்பேட்டைக்கு நிலம் கையகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் மேல்மா பகுதி விவசாயிகள் தொடா்ந்து 25 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
சிப்காட் அலகு - 3
விரிவாக்கப் பகுதி எனப்படும் அலகு - 3 பகுதியில் அனக்காவூா் ஒன்றியம், தேத்துறை உள்வட்டத்தைச் சோ்ந்த வடஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீா்குன்றம், குறும்பூா், நா்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 9 கிராமங்களில் உள்ள சுமாா் 3174 ஏக்கரில் நஞ்சை, புஞ்சை என விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன.
25-ஆவது நாளாக தொடரும் போராட்டம்...
சிப்காட் தொழில்பேட்டைக்கு விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களை கையப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சாா்பில் மேல்மா கூட்டுச் சாலைப் பகுதியில் ஜூலை 1-இல் தொடங்கிய காத்திருப்புப் போராட்டமானது புதன்கிழமையோடு 25 நாள்கள் ஆகின்றன.
25-ஆவது நாளில்...
25-ஆவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பாமக நிா்வாகி சீனுவாசன், 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தைச் சோ்ந்த பெண்கள் மற்றும் கிராம பொது மக்கள் என 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...