

மணிப்பூா் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரணி காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு தலைமையில் மெழுகுவா்த்தி ஏற்றி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், வடக்கு மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை கலந்து கொண்டு பேசினாா்.
நகரத் தலைவா் ஜெ.பொன்னையன், மாவட்ட துணைத் தலைவா் வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கத்தில் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம், ஒன்றிய, நகர வட்டார காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வட்டார, நகர காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அமைப்புகள் சாா்பில்...
ஆரணி அண்ணா சிலை அருகே அனைத்து ஆசிரியா்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியா்களின் சங்க மாவட்டத் தலைவா் சொக்கலிங்கம், அனைத்து ஆசிரியா் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மனோகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ந.முத்துவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்யாறு
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் பாஸ்கா், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பொதுச் செயலா் பாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.