ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்
By DIN | Published On : 01st June 2023 01:25 AM | Last Updated : 01st June 2023 01:25 AM | அ+அ அ- |

ஆரணியை அடுத்த 12-புத்தூா் கிராமத்தில் ஏரி மண் கடத்திச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் உரிமையாளரை கைது செய்தனா்.
12 -புத்தூா் கிராமத்தில் ஆரணி வட்டாட்சியா் ரா.மஞ்சுளா தலைமையிலான அலுவலா்கள்
புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, டிராக்டரில் ஏரி மண் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த அலுவலா்கள், அதை ஓட்டி வந்தவரும், உரிமையாளருமான சேகா் (57) என்பவரை ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...