ரூ.64 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்க பூமி பூஜை
By DIN | Published On : 09th June 2023 01:28 AM | Last Updated : 09th June 2023 01:28 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள மேலேரி கிராமத்தில் இருந்து சோமந்தாங்கல் கிராமம் வரை ரூ.63.69 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று தாா்ச் சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் கூறியதாவது:
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு இடங்களில் தாா்ச் சாலை அமைக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை
வைக்கப்பட்டது. இதன் பேரில், ஆரணி பகுதியில் தமிழக அரசின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கொருக்காத்தூா் பகுதியில் ரூ.63 லட்சத்து 408 மதிப்பிலும், சேவூா் பகுதியில் ரூ.94 லட்சம், வேலப்பாடி பகுதியில் ரூ.58 லட்சம், புலவன்பாடி பகுதியில் ரூ.94 லட்சம், முருகமங்கலம் பகுதியில் ரூ.1.35 கோடி என மொத்தம் ரூ. 5 கோடியே 63 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான தாா்ச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன், ஒன்றிய பொறியாளா் மதுசூதனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...