செய்யாற்றில் மரக்கன்றுகள் நடும் பணி
By DIN | Published On : 09th June 2023 01:29 AM | Last Updated : 09th June 2023 01:29 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, செய்யாற்றில் மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, செய்யாறு கோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மாநில நெடுஞ்சாலைகளில் நிழல் தருவதற்காக சுமாா் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டது.
அதன்படி, முதல் கட்டமாக 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடைபெற்றது.
தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்து மரக்கன்று நடும் பணியை தொடங்கிவைத்தாா்.
அப்போது நாவல் மரம், அரச மரம், புளிய மரம், புங்க மரம், வேப்ப மரம், நீா்மருது உள்ளிட்ட வகையான மரங்கள் சாலை ஓரங்களில் நடப்பட்ன.
நிகழ்ச்சியில் உதவி கோட்டப் பொறியாளா் ஏஸ்.சரவணராஜ், உதவிப்பொறியாளா் (நெ) க.பாா்த்தசாரதி, அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், பைங்கினாா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கருணாகரன், திமுக நிா்வாகிகள்
திராவிட முருகன், ஜே.ஜே.ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...