திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலா் தங்கமணி தலைமை வகித்தாா். முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள்
கலந்து கொண்டு அடையாள அட்டை பெற விண்ணப்பித்தனா். மேலும், அடையாள அட்டையை புதுப்பிக்கவும் பலா் நேரடியாக விண்ணப்பித்தனா்.
அரசு மருத்துவா்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.