விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்
By DIN | Published On : 15th June 2023 12:35 AM | Last Updated : 15th June 2023 12:35 AM | அ+அ அ- |

5 ஆண்டுகளில் பலன் தரக்கூடிய தென்னை மரக்கன்றுகளை விவசாயிகள் வாங்கிப் பயன்பெறலாம் என்று வேளாண் ஆராய்ச்சிக் கல்லூரி தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரத்தை அடுத்த வாழவச்சனூா் கிராமத்தில் அரசு வேளாண் ஆராய்ச்சிக் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு ‘அரசம்பட்டி’ என்ற புதிய ரக தென்னை மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கன்றுகள் 5 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்.
ஒரு மரத்தில் ஆண்டுக்கு 125 முதல் 150 தேங்காய்கள் வரை காய்க்கும்.
எனவே, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் இந்த வகை தென்னங்கன்றுகளை வாங்கி, நடவு செய்து அதிகளவில் பயன்பெறலாம் என்று வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.