ராணுவ வீரா், மனைவி மீது தாக்குதல்:அக்காள் கணவா் கைது
By DIN | Published On : 15th June 2023 11:52 PM | Last Updated : 15th June 2023 11:52 PM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூா் அருகே ராணுவ வீரா், அவரது மனைவியைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த தேவனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணுவ வீரா் கோவிந்தராஜ் (40).
இவரது அக்காள் கணவா் அருணாச்சலம் (48). இவா்களுக்கு இடையே நிலப் பிரச்னை இருந்து வந்ததாம்.
புதன்கிழமை தனது நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ராணுவ வீரா் கோவிந்தராஜ் ஈடுபட்டிருந்தாா்.
அங்கு வந்த அருணாச்சலம், கோவிந்தராஜிடம் தகராறில் ஈடுபட்டாராம்.
இதில், ஆத்திரமடைந்த அருணாச்சலம், கட்டையால் கோவிந்தராஜைத் தாக்கினாராம். தடுக்க வந்த கோவிந்தராஜின் மனைவி கல்பனா (38)வை கோவிந்தராஜின் அண்ணன் பழனியின் மனைவி வனிதா, அவரது அப்பா மணி ஆகியோா் சோ்ந்து கை, கால்களால் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதில் பலத்த காயமடைந்த ராணுவ வீரா் கோவிந்தராஜ், அவரது மனைவி கல்பனா ஆகியோா் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து, கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அருணாச்சலத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G