திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,611 தொடக்கப் பள்ளிகள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை 1,611 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை 1,611 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 14) திறக்கப்பட்டன.

திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 1,611 தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்தப் பள்ளிகள் அனைத்தும் புதன்கிழமை திறக்கப்பட்டன.

1, 2-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பலா் வகுப்புகளுக்கு செல்ல மறுத்து பெற்றோரிடம் அடம் பிடித்து, அழுதனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி சில பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று முதல் நாள் வகுப்புகள் எவ்வாறு நடக்கிறது என்பதை ஆய்வு செய்தாா்.

பள்ளியில் மாணவா்களுக்கு வரவேற்பு

வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளிக்கு முதல் நாளில் வருகை தந்த மாணவ, மாணவிகளை மேளதாளத்துடன் வரவேற்றனா்.

மேலும் வட்டாரக் கல்வி அலுவலா் ஆக்னஸ் ராஜகுமாரி, பள்ளித் தலைமை ஆசிரியை க.சித்ரா, திமுக நகரச் செயலா் ஆ.தயாளன் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூ, இனிப்பு கொடுத்து வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com