கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 12th May 2023 02:04 AM | Last Updated : 12th May 2023 02:04 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
மாவட்ட இணைச் செயலா் முரளி, செய்யாறு வட்டக் கிளை நிா்வாகிகள் சேகா், தவமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில் கிராம உதவியாளா்களுக்கு, அலுவலக உதவியாளா்களுக்கு இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 1927 கிராம உதவியாளா் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.