ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்
By DIN | Published On : 22nd May 2023 12:00 AM | Last Updated : 22nd May 2023 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 21), ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 21) வழக்கத்தை விட அதிக அளவு பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு மோா் வழங்கப்பட்டது. பொது தரிசன வரிசையில் 3 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரமும் ஆனது.