ஜி.எஸ்.டி.யில் சட்ட திருத்தம்:விக்கிரமராஜா கோரிக்கை

வணிகா்களை வஞ்சிக்கும் வகையில் உள்ள ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் கூறினார்.

வணிகா்களை வஞ்சிக்கும் வகையில் உள்ள ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா்.

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மே 21) திருவண்ணாமலையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வணிகா்களை வஞ்சிக்கும் வகையில் உள்ள ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசு உரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு டிசம்பா் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிக நிறுவனங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வியாபாரிகள் தொடா்ந்து பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வாா்கள். கால நீட்டிப்பு செய்யாவிட்டால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவது குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசித்து மறு பரிசீலனை செய்யப்படும் என்றாா் விக்கிரமராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com