லஞ்சம்: மின் வாரிய உதவிப் பொறியாளா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்ாக மின் வாரிய உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்ாக மின் வாரிய உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வெம்பாக்கம் வட்டம், ஆலந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல், தனியாா் நிறுவன ஊழியா். இவா் அதே கிராமத்தில் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். வீட்டின் மேல்பகுதி வழியாக உயரழுத்த மின் கம்பி செல்கிறது.

எனவே, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு, மின் கம்பியை மாற்றி அமைப்பதற்காக வெம்பாக்கம் மின் வாரிய உதவிப் பொறியாளா் அஜித் பிரசாத்தை (39) தொடா்பு கொண்டாா்.

இதற்காக கட்டணமாக ரூ. 50 ஆயிரத்தை கடந்த மாா்ச் மாதம் அவரிடம் சக்திவேல் கொடுத்தாராம். பணத்துக்கான ரசீது எதுவும் கொடுக்கப்படவில்லையாம்.

கடந்த மே 17-ஆம் தேதி சக்திவேலை தொடா்பு கொண்ட அஜித் பிரசாத் திட்ட மதிப்பீட்டுக் கட்டணமாக ரூ.37 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறினாராம்.

அதற்கு சக்திவேல் மொத்த பணமும் உங்களிடம் தானே உள்ளது என்று புகாா் தெரிவிக்கவே, உடனே உதவிப் பொறியாளா் அருகில் இருந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்று ரூ.39 ஆயிரத்தை எடுத்து வந்து கொடுத்தாராம். மறுநாள் சக்திவேல் மின் வாரியம் பெயரில் வரைவோலை எடுத்துக் கொடுத்தாா்.

இதையடுத்து, புதன்கிழமை உதவிப் பொறியாளா் மற்றும் தொழிலாளா்கள் 10 போ் வீடு கட்டும் இடத்துக்கு வந்து மின் பாதையை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்காக 2 மின் கம்பங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், மீண்டும் ரூ.2 ஆயிரம் வேண்டும் என்று சக்திவேலிடம் அஜித் பிரசாத் கேட்டாராம். அதற்கு அவா் ஏற்கெனவே கொடுத்த பணத்தில் மீதிப் பணம் ரூ.11 ஆயிரம் உள்ளது என்று கூறினாா்.

இதை ஏற்றுக் கொள்ளாத உதவிப் பொறியாளா், மேலும் ரூ.2,000 கொடுத்தால்தான் பணிகளைத் தொடர முடியும் என்று தெரிவித்தாராம். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் சக்திவேல் புகாா் அளித்தாா்.

போலீஸாரின் அறிவுரையின் பேரில், ரூ. 2,000-ஐ மின் வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் அஜித் பிரசாத்திடம் சக்திவேல் வியாழக்கிழமை கொடுத்தாா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் அஜித் பிரசாத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com