இரு வீடுகளில் ரூ.2.52 லட்சம் ரொக்கம் 2 பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 26th May 2023 05:01 AM | Last Updated : 26th May 2023 05:01 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருகே ஒரே நாளில் இரு வீடுகளில் புகுந்து ரூ.2.52 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரத்தை அடுத்த நாச்சானந்தல் ஊராட்சி, கொட்டாவூரைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் வாசுதேவன் (39). திருவண்ணாமலையில் கணினி மையம் நடத்தி வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை (மே 23) இரவு வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் குடும்பத்துடன் தூங்கினாா்.
புதன்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்க நகைகள், மேஜை மீது வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.
மற்றொரு திருட்டு:
வாசுதேவனின் பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி தானம்மாள் (70). இவரும் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன் பகுதியில் படுத்துத் தூங்கினாராம். புதன்கிழமை காலை எழுந்தபோது வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரம் திருடப்பட்டு இருந்ததாம்.
இந்த இரு திருட்டுச் சம்பவங்கள் குறித்து வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.