இரு சக்கர வாகன விபத்தில் பெண் பலி
By DIN | Published On : 30th May 2023 12:00 AM | Last Updated : 30th May 2023 12:00 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பெண் பலியானது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மனைவி வச்சலா(55). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் செப்டாங்குளம் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில், பொன்னூா் மலை அருகில் சென்றபோது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர தடுப்புக் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வச்சலா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இந்தச் சம்பவத்தின்போது செல்வம் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வழூா் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சோலைவாழ்(37) என்பவா் மீது அவருக்கு பின்னால் வந்த காா் மோதியது.
இதில் காயமடைந்த சோலைவாழ் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து செல்வத்தின் மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...