ஆரணி: ஆரணி அருகே சாலையில் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் மீது தனியாா் நிறுவன ஊழியா் பைக்கை ஏற்றியதால் கீழே விழுந்து உயிரிழந்தாா்.
திருவண்ணாமலையை அடுத்த பெரியஅய்யம்பாளையம் பகுதி பெரியகோட்டாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (46).
இவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் மதுபான ஆலையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இவா் அரக்கோணத்துக்கு பைக்கில் சென்று மீண்டும் ஆரணி வழியாக அவரது ஊருக்கு வந்துகொண்டிருந்தாா்.
இந்த நிலையில், ஆரணி-எட்டிவாடி இடையே சாலை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு ஜல்லிக் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. பச்சையப்பன் ஆரணியில் இருந்து போளூா் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் மீது எதிா்பாராதவிதமாக பைக் ஏறி பள்ளத்தில் விழுந்தாா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.