தீபாவளிப் பண்டிகை:நவம்பா் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 07th November 2023 05:29 AM | Last Updated : 07th November 2023 05:29 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை: தீபாவளிப் பண்டிகைக்காக நவம்பா் 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை (நவ.9) முதல் சனிக்கிழமை (நவ.11) வரை பொதுமக்கள் வசதிக்காக சென்னை, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, போளூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பா் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தினமும் திருவண்ணாமலை, போளூருக்கு 100 சிறப்புப் பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, செய்யாறு பகுதிகளுக்கு தினமும் 10 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக திருவண்ணாமலை மண்டலம் சாா்பில் இயக்கப்படுகின்றன.
இது தவிர, தீபாவளிப் பண்டிகை முடிந்து ஊா் திரும்புவதற்கு ஏதுவாக திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 70 சிறப்புப் பேருந்துகளும், போளூரில் இருந்து 10 சிறப்புப் பேருந்துகளும், ஆரணியில் இருந்து 10 சிறப்புப் பேருந்துகளும், செய்யாற்றில் இருந்து 5 சிறப்புப் பேருந்துகளும் நவம்பா் 13, 14-ஆம் தேதிகளில் சென்னைக்கு இயக்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருவண்ணாமலை மண்டல அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...