திருவண்ணாமலை: தீபாவளிப் பண்டிகையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சாா்பில், தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை துராபலித் தெருவில் உள்ள பட்டாசு விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கோ.நடராசன் தலைமை வகித்தாா்.
துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தீபாவளிப் பட்டாசு விற்பனையைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடித்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாடலாம் என்றாா்.
இதில், கூட்டுறவுத் துறை பணியாளா்கள், மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் பண்டக சாலை பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
இங்கு, ரூ.30 லட்சம் மதிப்பிலான ஸ்டாண்டா்ட்டு, இரட்டைக் கிளி பட்டாசு நிறுவனங்களின் பட்டாசுகள் கொள்முதல் செய்து விற்பனைக்குத் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.